ராகி ஸ்டிக்ஸ் ஃபிரை
தேவையான பொருட்கள்:
ராகி சேமியா – 1/4 கிலோ
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
கடுகு, உ.பருப்பு – தாளிக்க
கா.மிளகாய் – 2
எண்ணெய், உப்பு தேவைக்கேற்ப
செய்முறை:
ராகி ஸ்டிக்கை உப்பு கலந்த நீரில் இரண்டு நிமிடம் ஊற வைத்து இட்லி தட்டில் ஐந்து நிமிடம் வேக வைக்கவும். எண்ணைய் சூடான பின் கறிவேப்பிலை, காயந்த மிளகாய், கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்து அதனுடன் வேகவைத்த ராகி ஸ்டிக்கைச் சேர்த்து கிளறி இறக்கி விடலாம். சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும். சத்துக்களும் அதிகம்.
Advertisements
மறுமொழியொன்றை இடுங்கள்