சில்லி நண்டு (சைனீஸ் முறை)- நான் Vej

சில்லி நண்டு (சைனீஸ் முறை)

தேவையான பொருட்கள்:

crab • நண்டு – அரை கிலோ
• மிளகாய் விழுது – 2 மேசைக்கரண்டி
• எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
• பூண்டு – ஒரு மேசைக்கரண்டி (நறுக்கியது)
• அஜினோமோட்டோ – ஒரு சிட்டிகை
• சோளமாவு – 2 மேசைக்கரண்டி
• சர்க்கரை – ஒரு மேசைக்கரண்டி
• தக்காளி – ஒரு கப் (நறுக்கியது)
• வினிகர் – ஒரு மேசைக்கரண்டி
• முட்டை – ஒன்று
• உப்பு – தேவையான அளவு

செய்முறை:

• ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், நறுக்கின பூண்டினைப் போட்டு வதக்கவும்.

• அத்துடன் மிளகாய் விழுதினைச் சேர்த்து வதக்கி பின்பு ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

• கொதித்தவுடன் அதில் சுத்தம் செய்த நண்டுகளைப் போட்டு வேகவிடவும்.

• நீரின் அளவு, நண்டு துண்டங்கள் முழுவதும் நனையும் அளவிற்கு இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

• தக்காளி விழுது, சர்க்கரை, வினிகர், பூண்டு இவையனைத்தையும் கொதிக்கும் குழம்பில் போடவும்.

• ஒரு சிட்டிகை அஜினோமோட்டோ மற்றும் தேவையான அளவு உப்பும் சேர்த்து மூடி வைத்து வேகவிடவும்.

• சுமார் 10 நிமிடங்கள் வெந்த பிறகு, குழம்பினைக் கெட்டியாக்க அதில் சோளமாவினைச் சேர்க்கவும்.

• ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து, அதனையும் குழம்பில் சேர்க்கவும்.

• சற்று நேரத்தில் குழம்பு கெட்டியானவுடன் இறக்கி விடவும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: