தொடங்கியது விண்டோஸின் “விஸ்டா சகாப்தம்..!

தொடங்கியது விண்டோஸின்
“விஸ்டா சகாப்தம்”
ஏறத்தாழ ஆறு ஆண்டுகள், 600 கோடி டாலர்கள், 5000 கம்ப்யூட்டர் புரோகிராமிங் வல்லுநர்கள் (இந்தியர்கள் 300 பேர்) எனப் பல்வேறு வகைகளில் பெரிய அளவில் தயாரிக்கப்பட்ட மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் விஸ்டா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வெளியிடப்பட்டுவிட்டது. நிறுவனங்களுக்கான பதிப்பு சென்ற டிசம்பரில் வெளியிடப்பட்டாலும் பல
நிறுவனங்கள் இதில் ஆர்வம் காட்டவில்லை என்பது வியப்பான செய்தியே. தற்போது வந்திருக்கும் பொதுமக்களுக்கான விஸ்டா பதிப்பு மக்களிடையே பலத்த வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வரும் கம்ப்யூட்டரை மக்கள் விரும்பினாலும் அதற்கென தற்போது விண்டோஸ் எக்ஸ்பியுடன் வரும் கம்ப்யூட்டரின் விலைக்கு மேலாக 5% முதல் 6% வரை கூடுதலாகப் பணம் செலுத்த வேண்டியதிருக்கும்.

முற்றிலும் புதிய சில வசதிகள் இந்த விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இருக்கின்றன என்று பல மாதங்களுக்கு முன்னரே இப்பகுதியில் எழுதி இருந்தோம். ஹார்ட்வேர் சாதனத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஏரோ கிளாஸ் எனப்படும் கிராபிகல் யூசர் இன்டர்பேஸ், கூடுதலான வழிகளில் தேடி அறியும் வசதி, புதிய ஆடியோ சிஸ்டம், கூடுதல் பாதுகாப்பு போன்ற விஸ்டா தரும் வசதிகள்
பெரும்பாலும் புதியனவாகத் தான் இருக்கின்றன. ஆனால் விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை தங்கள் கம்ப்யூட்டரில் பதித்து இயக்க ஹார்ட்வேர் சாதனங்கள் அதற்கிணையான வகையில் மேம்படுத்தப்பட வேண்டும். இதற்கு முன் ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் வெளிவந்தபோது மேற்கொள்ளப்பட்ட ஹார்ட்வேர்
தேவைகளைக் காட்டிலும் தற்போது கூடுதலாகவே தேவை இருக்கும் என கம்ப்யூட்டர்களைத் தயாரித்து வழங்கும் எச்.பி. மற்றும் டெல் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. விஸ்டா பதிந்து இயக்கக் கீழ்க்காணும் குறைந்த பட்ச அளவிலான ஹார்ட்வேர் சாதனங்களுடன் ஒரு கம்ப்யூட்டர் வடிவமைக் கப்பட்டிருக்க
வேண்டும். 800 மெகா ஹெர்ட்ஸ் வேகம் கொண்ட சிப், குறைந்தது 20 கிகாபைட் காலி இடம் உள்ள ஹார்ட் டிஸ்க், குறைந்தது 128 எம்பி விடியோ ராம் கொண்ட கூடுதல் திறனுடன் கூடிய கிராபிக் கார்ட் ஆகியவை சில அடிப்படைத் தேவைகளாகும். முழுமையான அளவிலான விஸ்டா பதிப்பு ரூ.16,000 க்கும்
அடிப்படை வசதிகள் மட்டும் கொண்ட விஸ்டா பதிப்பு ரூ.8,000க்கும் கிடைக்கிறது. கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்கள் விஸ்டா சிஸ்டத்தினை எதிர்பார்த்தே அதனை ஏற்றுக் கொள்ளும் வகையில் தங்கள் கம்ப்யூட்டர்களை வடிவமைத்து விற்பனை செய்து வந்துள்ளனர். எனவே இவர்கள் விண்டோஸ் விஸ்டாவிற்கு மாறிக் கொள்ள பிரச்னை இருக்காது. பழைய எக்ஸ்பி கம்ப்யூட்டர்கள்
வைத்திருப்போர்கள் தங்கள் மெமரியினை கூடுதலாக்க குறைந்த அளவில் பணம் செலவழிக்க வேண்டியதிருக்கும். விண்டோஸ் விஸ்டாவின் இன்னொரு சிறப்பம்சம் இது 18 பன்னாட்டளவிலான மொழிகளில் வெளியிடப்பட்டது என்பது தான். இந்தியாவில் ஹிந்தியில் வெளியிடப்பட்டுள்ளது.
விரைவில் தெலுங்கு மற்றும் மராத்தி உட்பட 13 இந்திய மொழிகளில் இது வெளியிடப்பட உள்ளது. ஹைதராபாத் நகரில் இயங்கும் மைக்ரோசாப்ட் ஆய்வு மையத்தில் 3000 வல்லுநர்கள் விண்டோஸ் விஸ்டா வடிவமைப்பில் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக ரிமோட் இணைப்பு, பைல்கள் பேக்கப் மற்றும் பைல் சிஸ்டம் பயன்பாடுகள் ஆகியவற்றில் இவர்களின் திறமை பயன்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கான விண்டோஸ் விஸ்டா பதிப்பில் நான்கு வகைகள் வெளிவரு கின்றன. ஸ்டார்ட்டர் எடிஷன் என்று அழைக்கப்படும் பதிப்பு ரூ. 22,000 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் பெர்சனல் கம்ப்யூட்டர்களில் பதிவதற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அடுத்த பதிப்பு வீடுகளிலும் சிறிய அலுவலகங்களிலும் பயன்படுத்தவதற்கென உருவாக்கப்பட்ட ஹோம் பேசிக் வகை ஆகும்.
மூன்றாவதாக உள்ள ஹோம் பிரிமியம் எடிஷன் இதற்கு முன் உள்ள மல்ட்டி மீடியா சென்டர் எடிஷன் போல மல்ட்டி மீடியா வசதிகள் கொண்டது ஆகும். நான்கா வதாக உள்ள மல்ட்டி மீடியா அல்டிமேட் என்னும் பதிப்பில் ஹோம் வகைப் பதிப்பில் உள்ள வசதிகளுடன் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களுக்கான வசதிகளும் வர்த்தக நிறுவனங்களுக்குத் தேவையான வசதிகளும் இணைக்கப்பட்டு
இயங்குகின்றன. விண்டோஸ் விஸ்டா பதிப்புடன் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 பதிப்பும் ஜனவரி 30 அன்று அனைத்து நாடுகளிலும் வெளியிடப்பட்டது.

மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி பால்மர் விஸ்டா பற்றி குறிப்பிடுகையில் இன்னும் மூன்று மாதங்களில் விண்டோஸ் 95 தொகுப்பு முன்பு விற்பனையானதைக் காட்டிலும் ஐந்து மடங்கு கூடுதலாக விஸ்டா விற்பனையாகும் என்று குறிப்பிட்டார்.

2. விஸ்டா  – இதுவரை தெரிந்த புதுமைகளும் வசதிகளும்

1. கம்ப்யூட்டரில் புதிய ஹார்ட் டிஸ்க்கை நிறுவுகையில் அதற்கான டிரைவரை முதலில் பதித்த பின்னரே அதில் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பதித்து வந்தோம். எடுத்துக் காட்டாக தற்போது பெரும்பாலும் பயன்படுத்தப்படும் சடா (SATA) வகை ஹார்ட் டிஸ்க்குகளை அப்படித்தான் பதிக்கிறோம். விண்டோஸ் விஸ்டாவைப் பொறுத்த வரை இது தேவையில்லை. ஆப்பரேட்டிங் சிஸ்டமே
ஹார்ட் டிஸ்க்கைப் புரிந்து கொண்டு அதற்கான டிரைவர்களை வைத்துக் கொண்டு இயங்குகிறது.

2. விண்டோஸ் விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டுள்ள டிவிடி டிஸ்க்கை வைத்து அதனைக் கம்ப்யூட்டரில் பதியும் போது ஏதேனும் காரணங்களால் கம்ப்யூட்டர் இயங்காமல் போனாலோ அல்லது மின் சக்தி வழங்குவது நின்று போனாலோ மீண்டும் முதலில் இருந்து பதிவு வேலையைத் தொடங்க
வேண்டியதில்லை. மறுபடியும் விஸ்டா டிவிடியைப் போட்டவுடன் தானாக விட்ட இடத்தை அறிந்து கொண்டு அங்கிருந்து தொடங்கி முடித்து விடும். இதில் பிரச்னை ஏற்பட்டால் தான் மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்.

3. உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஒரு பைலைத் தேடுகிறீர்கள். நாள் வாரியாக அல்லது பேர் வாரியாகத் தேடி ஒரு வழியாகக் கண்டு பிடிக்கிறீர்கள். பின் பைலைப் பயன்படுத்துகிறீர்கள். ஆனால் எப்படி தேடினோம் என்பதனையும் தேடும்போது அதே பெயரில் பெற்ற பிற வகை பைல்கள் என்ன என்ன என்பதனையும் மறந்துவிடுகிறீர்கள். இன்னொரு நாளில் “அடடா அதனைக் குறித்து வைக்க
மறந்துவிட்டோமே” என்று ஆதங்கப்படுகிறீர்கள். விஸ்டா இதற்கெல்லாம் வழி தருகிறது. உங்களின் ஒவ்வொரு தேடலையும் \SEARCHES\FOLDER\ என்னும் போல்டரில் பதிந்து வைக்கிறது. ஏதேனும் ஒரு தேடலை மீண்டும் தொடங்கினால் அதனை அப்போது அப்டேட் செய்கிறது. இது பல வழிகளில் நமக்கு உதவுகிறது.

4. இப்போது சிஸ்டம் டிரேயில் ஒரு கடிகாரம் இருக்கிறது. நம்மில் பலருக்கும் நண்பர்கள், உறவினர்கள் வெளிநாட்டில் இருக்கிறார்கள். கம்ப்யூட்டரில் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது சிங்கப்பூரில் அல்லது அமெரிக்காவில் என்ன நேரம் இருக்கும் என்று நமக்குள் கேட்டுப் பார்க்கிறோம். பின் கணக்குப்
போட்டு கண்டு பிடிக்கிறோம். இதெல்லாம் விஸ்டாவில் தேவையில்லை. சிஸ்டம் டிரேயில் ஒன்றுக்கு மேற்பட்ட கடிகாரங்களை வைத்துக் கொள்ளலாம். நம் பிரியமானவர்கள் அல்லது தொழில் நண்பர்கள் இருக்கும் நாடுகளின் நேரத்தை ஒவ்வொன்றிலும் போட்டு வைத்து அறிந்து கொள்ளலாம்.

5. விளையாட்டுப் பிரியர்களுக்கு நல்ல வசதி ஒன்று தரப்பட்டுள்ளது. விளையாட்டு ஒன்றினை விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். பாதியில் வேறு வேலை இருக்கிறது. இந்த விளையாட்டைப் பாதியில் சேமித்து வைத்து பின் தொடர சில விளையாட்டுக்களில் வசதி உள்ளது. அப்படி எக்ஸ்பியில் நீங்கள் இடையே விட்டுப் போன விளையாட்டுக்களை விஸ்டாவிற்குக் கொண்டு வந்து தொடரலாம்.
விஸ்டாவில் இயங்கும் விளையாட்டுக்களையும் இதே போல தொடரலாம். SAVE GAMES என்ற போல்டரில் இவை தங்குகின்றன. விஸ்டா தரும் GAMES போல்டர் என்பதுவும் விளையாட்டுப் பிரியர்களுக்கு வசதியான ஒன்று. கேம்ஸ் சம்பந்தப்பட்ட அனைத்தும் இதில் தங்குகின்றன. இதிலிருந்து விளையாட்டுக்களை இயக்கலாம். விளையாட்டுக்களுக்கெனத் தரப்படும் பேட்ச் பைல்களை இணைக்கலாம். குழந்தைகள் விளையாடாமல் இருக்க தடைகளை உருவாக்கலாம்.

6. வழக்கமான டெக்ஸ்ட் மற்றும் டாகுமென்ட் பைல்களுக்குப் பதிலாக பைல்களை அதிக பாதுகாப்புள்ள எக்ஸ்.எம்.எல். வகையில் பதிந்து கொள்ளலாம். இதற்கு வேர்ட் பிராசசரில் டாகுமெண்ட் ஒன்றை உருவாக்கிப் பின் பிரிண்ட் கட்டளை கொடுத்து அதில் கிடைக்கும் ஆப்ஷன்களில் XML Printer என்பதனைத் தேர்ந்தெடுத்து சேவ் செய்து கொள்ள வேண்டும்.

7. விண்டோஸ் விஸ்டாவின் முழு பயனையும் நீங்கள் பெற பல தளங்களில் Tweak புரோகிராம்கள் தரப்பட்டுள்ளன. அவற்றில் சில TweakVI என்னும் புரோகிராமை http://www.totalidea.com என்னும் தளத்திலிருந்தும் TweakVista என்னும் புரோகிராமை http://www.tweakvista.com/tweakvistautility என்னும் தளத்திலிருந்தும் இறக்கி, இயக்கிப் பயன்படுத்தலாம். இவற்றுடன் VistaBootPRO என்றும் ஒரு புரோகிராம் http://www.vistabootpro.org என்ற தளத்தில் கிடைக்கிறது. இதுவும் சிறப்பாக விஸ்டாவின்
வசதிகளைப் பயன்படுத்த துணை செய்கிறது. இன்னொன்றையும் இங்கு நினைவு படுத்த வேண்டும். Windows ReadyBoost என்ற புரோகிராம் மூலம் கழட்டி எடுத்துச் செல்லக் கூடிய பிளாஷ் மெமரியைக் கம்ப்யூட்டரின் மெமரியாகப் பயன்படுத்தலாம்.

8. மிக முக்கியமான மற்றும் அதிக வசதி கொண்ட பிரிவு விண்டோஸ் எக்ஸ்புளோரர் ஆகும். விண்டோஸ் எக்ஸ்புளோரரில் பைல்களை வரிசைப் படுத்த பெயர், சைஸ், வகை, திருத்தப்பட்ட தேதி, உருவாக்கப்பட்ட தேதி (Name, Size) எனப் பல வகைகளைப் பயன்படுத்துகிறோம். விண்டோஸ் எக்ஸ்பியில் இது போல 45 வகைகளைப் பயன்படுத்தலாம். ஆனால் விண்டோஸ் விஸ்டாவில் 250
வகைகள் உள்ளன. இவற்றால் பைல்களைத் தேடி அறிவது மிக மிக எளிதாகிறது.
 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: