கட்டற்ற களஞ்சியம் வீக்கிபீடியாவிலிருந்து…!

கட்டற்ற களஞ்சியம் வீக்கிபீடியாவிலிருந்து…!

புதிய தமிழ் யுனிகோட் குறிமுறை

புதிய தமிழ் யுனிகோட் குறிமுறை என்பது ஏற்கனவே இருக்கும் தமிழ் யுனிகோட் குறிமுறைக்கு மாற்றாக பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் எழுத்துக்குறி முறையாகும்.

தற்போது பாவனையிலிருக்கும் குறிமுறையின் போதாமைகள் மீதான தொடர்ச்சியான விவாதங்களின் விளைவாக இக்குறிமுறை தமிழ் நாடு அரசால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தற்போது நடப்பிலிருக்கும் தமிழ் யுனிகோட் குறிமுறையின் சர்ச்சைக்குரிய அம்சம், அதில் தமிழ் எழுத்துக்கள் அத்தனைக்கும் இடம் ஒதுக்கப்படாது, விசிறி, கொம்பு, புள்ளி போன்றவற்றுக்கு தனியான இடங்கள் ஒதுக்கப்பட்டு, முழுமையான உயிர்மெய் எழுத்துக்கள், இத்தகைய குறியீடுகளின் தொகுக்கப்பட்ட வடிவமாகவே வெளியீடு செய்யப்படுகிறது என்பதாகும்.

கீழ்க்காணும் படம் தற்போது நடப்பிலிருக்கும் தமிழ் யுனிகோட் குறிமுறை அட்டவணையை காண்பிக்கிறது.

பொதுவாகவே தமிழ் யுனிகோட் இனை பயன்படுத்தத்தக்க மென்பொருட்கள் மிகக்குறைவு. சில மென்பொருட்கள் யுனிகோடுக்கு ஆதரவு வழங்கியிருந்தபோதும் தமிழ் யுனிகோடினை சரியாக கையாள்வதில்லை. (எ.கா: AbiWord’)

இதற்கான முக்கியக் காரணம், முதல் நிலை யுனிகோட் ஆதரவு வழங்கப்பட்டிருந்தும், விசிறி கொம்பு போன்றவற்றை தொகுத்து எழுத்துக்களை காண்பிக்கும், சிக்கலான மொழிகளை கையாளும் இரண்டாம் நிலை யுனிகோட் ஆதரவு வழங்கப்படாமையாகும்.

கருத்தறிகைக்காக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் புதிய தமிழ் யுனிகோட் குறிமுறையானது இந்த போதாமையை போக்கி, தமிழ் மொழியின் எல்லா எழுத்துக்களுக்கும் இட ஒதுக்கீடு செய்கிறது.

இக்குறிமுறை, முதனிலை யுனிகோட் ஆதரவுள்ள எல்லா செயலிகளிலும் எந்த பிரச்சினையும் இல்லாமல் கையாளப்படக்கூடியதாக உள்ளது.

புதிய தமிழ் யுனிகோட் வைப்பு அட்டவணை

புதிய தமிழ் யுனிகோட் குறிமுறையின் வைப்பு அட்டவணை இதனை விளக்குகிறது

மாற்றுக்கருத்துக்கள்

இவ்வாறான புதிய குறிமுறை நியமம் ஒன்றினை அறிமுகப்படுத்துவது தொடர்பான தீவிர மாற்றுக்கருத்துக்களும் உண்டு.

14 வருடகாலமாக படிப்படியாக நடைமுறைப் படுத்தப்பட்டு இன்னமும் கூட பயன்பாட்டு முழுமையை எட்டாமலிருக்கும் தமிழ் யுனிகோட் குறிமுறையை மறுபடி ஒருமுறை மாற்றத்துக்குள்ளாக்குதல் பெரும் நெருக்கடிகளை உருவாக்கும் எனவும், இவ்வாறான மாற்றம் தேவையற்றது எனவும் சில வல்லுனர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளடைவில் இரண்டாம்நிலை யுனிகோட் ஆதரவினை எல்லா மென்பொருட்களும் வழங்கும்படி மாறிக்கொண்டபிறகு எந்த சிக்கலுமில்லை. அதற்காக இருக்கின்ற குறிமுறை ஏன் மாற்றவேண்டும் என்ற கருத்துக்களும் உண்டு.

தற்போது எண்ணிக்கையிலடங்கா வலைப்பக்கங்களும் தமிழ் உள்ளடக்கங்களும் நடப்பு யுனிகோட் குறிமுறையிலேயே அமைந்துள்ளன. விக்கிபீடியாவின் தமிழ் பக்கங்கள் அனைத்தும் நடப்பு தமிழ் யுனிகோட் குறிமுறையிலேயே உள்ளன.

இவ்வாறு கணிசமான அளவுள்ள பக்கங்களையும் உள்ளடக்கங்களையும் புதிய குறிமுறைக்கு மாற்றுவதென்பது சாத்தியமற்றதெனவும் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

புதிய தமிழ் யுனிகோட் குறிமுறையின் அதிகாரப்பூர்வ கருத்தறிகை வலைத்தளம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: